அமெரிக்க குற்றவாளிகள் மற்றும் ஏதிலி கோரிக்கையாளர்களை தடுத்து வைப்பதற்கு எல்செல்வதோர் இணக்கம் தெரிவித்துள்ளது.
உலக அளவில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மனித உரிமை அமைப்புகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் இந்த நடவடிக்கை தொடர்பில் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்கா ராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ தற்பொழுது எல் சல்வடோருக்க விஜயம் செய்துள்ளார்.
உலகில் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படுபவர்கள் எல்சல்வடோரில் தடுத்து வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீர்மானம் தொடர்பில் சட்ட சிக்கல்கள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எல்சல்வடோர் மத்திய அமெரிக்காவின் ஓர் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளுக்கும் இடையில் நிலவி வரும் நட்புறவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரூபியோ தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான செயல்பாடுகளில் ஈடுபடும் வெளிநாட்டு பிரஜைகளை அமெரிக்காவில் இருந்து எல் செல்வடோருக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.