எரித்திரியாவிற்கான அபிவிருத்தி உதவிகளை நிறுத்துவதாக சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஏதிலிகள் விவகாரத்தில் எரித்திரியா உரிய முன்னேற்றத்தை பெற தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் மே மாதத்துடன் எரித்திரியாவுக்கு வழங்கப்பட்டு வந்த அபிவிருத்தி உதவிகள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எரித்திரியாவுடன் சுமூகமான உறவுகள் பேணப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் குடியேறிகள் மற்றும் ஏதிலிகள் விவகாரத்தில் எரித்திரியாவின் செயற்பாடுகள் குறித்து திருப்திக் கொள்ள முடியாது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஏதிலி அந்தஸ்து கோரி விண்ணப்பம் செய்வோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் போது அவ்வாறானவர்களை மீண்டும் நாடு கடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில் அபிவிருத்தி உதவிகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.