சுவீடனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
மத்திய சுவீடனின் ஒரிபிரோ பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சந்தேக நபரும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒர்பிரோ பல்கலைக்கழக வைத்தியசாலையில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சந்தேக நபருடன் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.