கடவுச்சீட்டு அலுவலகத்தை 24 மணித்தியாலங்களும் திறந்து வைத்திருக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி நாளொன்றுக்கு சுமார் 4000 கடவுச்சீட்டுக்களை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
24 மணித்தியாலங்களும் சேவையை வழங்குவதற்காக ஒப்பந்த அடிப்படையில் மேலதிக பணியாளர்களை சேவையில் இணைத்துக் கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே ஓய்வு பெற்றுக் கொண்டவர்களையும் பணியில் இணைத்துக் கொள்ள உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றமை குறித்து இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவிவரும் கடவுச்சீட்டுகளுக்கான பற்றாக்குறை தொடர்பில் நிபுணர் குழு ஒன்று சில பரிந்துரைகளை அமைச்சரவைக்கு முன் வைத்திருந்தது.
இதன் அடிப்படையில் அரசாங்கம் ஏற்கனவே 1.1 ஒரு மில்லியன் கடவுச்சீட்டுக்களை வெற்று கடவுச்சீட்டு ஏற்கனவே அசராங்கம் தருவிக்க நடவடிக்கை எடுத்திருந்தது.
பொது நிர்வாக அமைச்சு மாகாண சபைகள் அமைச்சு உள்ளிட்டனவற்றின் ஒப்புதலுடன் அரசாங்க அதிகாரிகள் கடவுச்சீட்டு திணைக்களத்திற்கு இடமாற்றமும் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.