சுவீடனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வடைந்துள்ளது.
வயது வந்தவர்களுக்கான பள்ளிக்கூடம் ஒன்றில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மத்திய சுவீடனின் ஒரிபிரோ பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுவீடன் வரலாற்றில் இடம்பெற்ற பாரிய தாக்குதல் சம்பவம் இது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சந்தேக நபரும் கொல்லப்பட்டுள்ளதாக சுவீடன் போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த சந்தேக நபர் எந்த ஒரு குழுவுடனும் தொடர்பு பட்டவர் அல்ல என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு பட்டவரா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
எவ்வாறான ஆயுதத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினார் என்பது பற்றி விபரங்களையும் போலீசார் இன்னும் வெளியிடவில்லை.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்காக அந்நாட்டு பிரதமர் Ulf Kristersson வெளியிட்டுள்ளார்.
இந்த தாக்குதல் கண்டிக்கப்பட வேண்டியது என தெரிவித்துள்ளார்.