இலங்கையின் சில மாவட்டங்களின் மக்களுக்கு முக கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் சில மாவட்டங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சுவாச பிரச்சனைகளை எதிர் நோக்குவோர் இவ்வாறு முக கவசங்களை அணிந்து கொள்வது பொருத்தமானது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏழு மாவட்டங்களில் இவ்வாறு காற்றின் தரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குருநாகல், கண்டி, காலி, ரத்தினபுரி, அம்பிளிபட்டிய, திருகோணமலை மற்றும் அம்பத்தொட்டை ஆகிய மாவட்டங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை வவுனியா, நுவரெலியா புத்தளம்,முல்லைதீவு, பொலனறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் காற்றின் தரம் சற்றே குறைவடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
சுவாச பிரச்சனைகளை எதிர்நோக்குவோர் முகக் கவசங்களை அணிந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.