இலங்கையில் 11000 லஞ்சம் பெற்றவருக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறை

Must Read

இலங்கையில் 11000 ரூபா லஞ்சம் பெற்றுக் கொண்டவருக்கு ஏழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனையில் அலுவலக உதவியாளராக கடமையாற்றிய ஒருவர் இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கு நீதிமன்றம் மொத்தமாக 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, அதனை ஏழு ஆண்டுகள் பூர்த்தியாகும் வகையில் அறிவித்துள்ளது.

மேலும் இந்த நபருக்கு 31000 ரூபா அபராதம் விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்சம் பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தி குறித்த நபருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சந்தேக நபருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகியுள்ளதாகவும் இதனால் தண்டனை விதிப்பதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.