இந்தியாவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கொடும்பாவி எரிக்கப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குடியேறிகளை நாடு கடத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான இந்திய குடியேறிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இந்த நாடு கடத்தல் நடவடிக்கையின் போது அமெரிக்க அதிகாரிகள் மனிதாபிமானமற்ற முறையில் செயல்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனவே அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக இந்தியாவின் அரசியல்வாதிகள் பல்வேறு போராட்டங்களையும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தனர்.
இந்திய நாடாளுமன்றத்திற்கு எதிரிலும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி டிரம்ப்புடன் நெருங்கிய நட்பை பேணி வருவதாகவும் அதனையும் எதிர்ப்பதாகவும் இந்திய எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
விரைவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ள நிலையில் இந்த எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விமானத்தில் ஏற்றப்படும் வரையில் கைகளில் விலங்கிடப்பட்டு கால்கள் கட்டப்பட்டிருந்ததாகவும் இவ்வாறு மனிதாபிமானமற்ற வகையில் அமெரிக்க அதிகாரிகள் நடந்து கொண்டதாகவும் இந்திய குடியேறிகள் தெரிவித்துள்ளனர்.
கழிப்பறைக்கு செல்வதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை என குடியேறிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.