சுவிசில் இடம் பெற்ற விமான விபத்தில் மூவர் காயம்

Must Read

சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற விமான விபத்து சம்பவம் ஒன்றில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

இலகு ரக தனியார் விமானம் ஒன்று சுவிட்சர்லாந்தின் பேர்ன் கான்டனில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

லியுசிஜென் பகுதியில் இந்த விபத்து இடம் பெற்றதாக போலீசாருக்கு தகவல் கிடைக்க பெற்றுள்ளது.

ஐந்து இருக்கைகளைக் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது என தெரிவிக்கப்படுகிறது.

Grenchen விமான ஓடு தளத்திற்கு அருகாமையில் விமான விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காண காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

விமான விபத்தில் இரண்டு பெண்களும் ஒரு ஆணும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து விமானத்தில் விபத்துக்குள்ளானவர்களையும் மீட்கும் பணிகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.