சுவிஸ் தூதுவருக்கும் இலங்கை சபாநாயகருக்கும் சந்திப்பு

Must Read

இலங்கைக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் கலாநிதி சிரி வோல்ட்டிற்கும், சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிற்கும் விசேட சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இலங்கையின் பாராளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

சுவிட்சர்லாந்து அரசாங்கம் பல்வேறு துறைகளில் இலங்கைக்கு வழங்கி வரும் உதவிகளுக்கு சபாநாயகர் இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி, ஊழல் ஒழிப்பு முயற்சிகள், நல்லிணக்கம் மற்றும் பாராளுமன்ற ஒத்துழைப்புக்களை அதிகரித்தல் உள்ளிட்ட பிரதான துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய சுவிட்சர்லாந்துத் தூதுவர், எதிர்காலத்திலும் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான சுவிட்சர்லாந்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.