3.7 C
Switzerland
Monday, March 24, 2025

உலகின் புத்திசாதூரியமான நாடாக சுவிட்சர்லாந்து தெரிவு

Must Read

உலகின் மிகவும் புத்திசாதூரியமான நாடாக சுவிட்சர்லாந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது.

நோபள் பரிசு முன்மொழிவுகள், கல்வித் தரம், நுண்ணறிவு, பல்கலைக்கழக தரப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு ஏதுக்களின் அடிப்படையில் இந்த தெரிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் ஐரோப்பிய நாடுகள் பல முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பட்டியலில் நூற்றுக்கு 92.02 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டு சுவிட்சர்லாந்து முதலிடத்தை வகிக்கின்றது.

போர்பஸ் அறிக்கை, உலக வங்கி, உலக சனத்தை மதிப்பாய்வு மற்றும் நோபள் பரிசு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களின் தவல்களின் அடிப்படையில் இந்த தெரிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் மொத்த சனத்தொகையில் குறைந்தபட்சம் 40 வீதமானவர்கள் இளங்கலை பட்டத்தை பெற்றுக்கொண்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

18 வீதமனாவர்களுக்கு முதுகலை பட்டம் உண்டு என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பட்டியலில் முதல் இடத்தை சுவிட்சர்லாந்தும், இரண்டாம் இடத்தை ஐக்கிய இராச்சியமும் மூன்றாம் இடத்தை அமெரிக்காவும் பெற்றுக் கொண்டுள்ளன.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES