அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மற்றுமொரு தீர்மானத்தை அந்நாட்டு நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் யுஎஸ் எயிட் எனப்படும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிறுவனத்தின் பணியாளர்கள், பணிநீக்கம் செய்யப்படுவதனை தடுக்கும் வகையில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யுஎஸ் எயிட் நிறுவனத்தின் சுமார் 2200 பணியாளர்கள் இவ்வாறு பணி நீக்கம் செய்யப்படவிருந்தனர்.
எனினும் குறித்த தீர்மானத்தை இடைநிறுத்துமாறு ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் இதுவரையில் 84 நிறைவேற்று அதிகார உத்தரவுகளில் கையொப்பமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காலநிலை மாற்றம், பாதுகாப்பு, குடியேறிகள், அரச பணியாளர்கள், புலனாய்வு விவகாரங்கள், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இவ்வாறு நிறைவேற்று உத்தரவுகள் பிறப்பிக்க்பபட்டுள்ளன.
இவ்வாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளில் பல பெரும் சர்ச்சைக்குரியவை என்பது குறிப்பிடத்தக்கது.
யுஎஸ் எயிட் நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கை சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முடங்கச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.