இலங்கையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட உள்ள முதலாவது வரவு செலவு திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளை விதித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு கடன் தொகையை வழங்கப்பட வேண்டுமாயின் வரவு செலவு திட்டத்தில் சில பரிந்துரைகளை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் மட்டுமே அடுத்த கட்ட கடன் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடுகள் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில் வரவு செலவு திட்டத்தில் சில நிபந்தனைகளை அரசாங்கம் பூர்த்தி செய்தால் மூன்றாம் கட்ட தவணை கடன் வழங்கப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவு பொறுப்பாளர் ஜுலி கொசாக் தெரிவித்துள்ளார்.