அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உருக்கு மற்றும் அலுமினிய பொருட்களுக்கு 25 வீத வரி விதிப்பதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்குள் ஏற்றுமதி செய்யப்படும் இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகையான உருக்கு மற்றும் இரும்பு உலோகங்களுக்கு இவ்வாறு வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் உலோகங்களுக்கான வரி விதிப்பில் எவ்வித விலக்குகளும் அளிக்கப்படாது என அவர் அறிவித்துள்ளார்.
குறிப்பாக இந்த வரி விதிப்பானது கனடா, பிரேசில், மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக சீனாவின் மீது கூடுதல் பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா சீனாவிடம் இருந்து மிகக் குறுகிய அளவிலான உலோகங்களை இறக்குமதி செய்த போதிலும் மறைமுகமாக சீன உலோகத்துறையின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.