இலங்கையில் தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினமும் ஒரு மணிநேர மின்வெட்டு இடம்பெறுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அதற்கமைய, 20 தொகுதிகளின் அடிப்படையில் மின் வெட்டு இடம்பெறுமென மின்சார சபை மேலும் அறிவித்துள்ளது
அதன்பிரகாரம், இன்று (13) மாலை 5.00 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஒரு மணி நேரம் மின் வெட்டு இடம்பெறும்.
மின் வெட்டு அமுல்படுத்தப்படும் பகுதிகள் மற்றும் நேரம் என்பன மின்சார சபையின் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.