இலங்கையில் காதலர் தினத்தை முன்னிட்டு பூக்கள் மற்றும் பூச்செண்டுகளின் விலைகள் பெருமளவு அதிகரித்து இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு புதிய சிவப்பு ரோஜாவின் குறைந்தபட்ச விலை 200 ரூபா எனவும் சிகப்பு ரோஜாவை பொதியிட்டு வழங்குவதற்கு 250 ரூபா அறவீடு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிகப்பு ரோஜாக்களை கொண்ட மலர் செண்டுகளின் விலை 8000 முதல் 12 ஆயிரம் ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சில இடங்களில் மலர் செண்டுகள் சராசரியாக 10500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியாவில் உற்பத்தியாகும் ரோஜா பூவின் விலை 400 ரூபாய் எனவும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரோஜாவின் விலை 300 ரூபாய் எனவும் பூ வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கலப்பு பூக்களை கொண்ட பூங்கொத்துக்கள் 2000 ரூபாய் முதல் 4500 வரையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சாதாரண பூக்களை கொண்ட மலர் செண்டின் சராசரி விலை சுமார் 2800 ரூபா என தெரிவிக்கப்படுகிறது.