ஐரோப்பிய நாடுகளின் செயற்பாடுகளை அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வென்ஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ரஸ்யா, சீனாவை விடவும் ஐரோப்பிய கண்டத்திற்கு உள்ளேய அதிகளவு அச்சுறுத்தல் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஜனநாயக முறைமைகள் தொடர்பில் அவர் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.
குடியேற்றம், பேச்சு சுதந்திரம் தொடர்பில் வாக்காளர்களின் நிலைப்பாட்டை பிரித்தானியா உதாசீனம் செய்வதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐரோப்பா தன்னை பாதுகாத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக சட்டவிரோத குடியேறிகள் விவகாரத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.
முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பங்குபற்றி உரையாற்றிய போது ஐரோப்பாவின் செயற்பாடுகள் குறித்து இவ்வாறு வென்ஸ் விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.