உக்ரைன் போர் தொடர்பில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் விசேட பேச்சு வார்த்தை நடத்தப்பட உள்ளது.
சவுதி அரேபியாவில் எதிர்வரும் வாரத்தில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் மோதல்கள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஒரு பின்னணியில் இந்த சமாதான பேச்சுவார்த்தை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று உக்கிரேன் ஜனாதிபதி விளொடிமிர் செலெண்ஸ்கீ அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வென்ஸை சந்தித்திருந்தார்.
ஜெர்மனியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றின் போது இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
எவ்வாறு எனினும் சவுதியில் நடைபெறவுள்ள சமாதான பேச்சு வார்த்தைகளில் பங்கேற்குமாறு உக்கிரேனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைன் போர் விவகாரம் தொடர்பில் அமெரிக்காவும் ரஷ்யாவும் மட்டும் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.