சுவிட்சர்லாந்து அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையை சீன அரசாங்கம் நிராகரித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வரும் திபெத் மற்றும் உய்கூர் இன சமூகத்தினர் மீது சீனா அழுத்தங்களை பிரயோகிப்பதாக குற்றம் சுமத்தி இருந்தது.
எனினும் இந்த அறிக்கையானது ஓர் போலி தகவல்கள் அடங்கிய அறிக்கை என சீனா நிராகரித்துள்ளது.
கடந்த புதன்கிழமை அன்று இந்த அறிக்கையை சுவிட்சர்லாந்து அரசாங்கம் வெளியிட்டிருந்தது.
உய்கூர் மற்றும் திபெத் என மக்கள் தொடர்பில் சீன அதிகாரிகள் உளவு பார்ப்பதாகவும் அவர்களை அடக்குமுறைக்கு உட்படுத்த முயற்சிப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது.
பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் இவ்வாறான தகவல்களை வெளியிட்டு உலக சமூகத்தினரை பிழையாக வழிநடத்த வேண்டாம் எனவும் சீன வெளிவிவகார அமைச்சு சுவிட்சர்லாந்திலும் கோரியுள்ளது.