ரஸ்யாவின் தாக்குதலினால் உக்ரைன் மின் உற்பத்தி நிலையம் சேதமடைந்துள்ளது.
தென் உக்ரைனின் மைகேலாவ் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதல் காரணமாக சுமார் 46000 பேர் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடுமையான குளிருடனான வானிலையில் மின்சாரம் தடைப்பட்டதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
திட்டமிட்ட அடிப்படையில் ட்ரோன்களைக் கொண்டு ரஸ்ய படையினர் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குளிர்காலத்தில் மின்சார வசதியின்றி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகவும் இது ஓர் பாரிய மனிதாபிமானப் பேரவலம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.