சமாதான பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பாவிற்கு இடம் இல்லை – ரஷ்யா

Must Read

உக்ரைன் சமாதான பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பாவிற்கு இடம் இல்லை என ரஷ்யா அறிவித்துள்ளது.

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கி லெவ்ரோவ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

சமாதான பேச்சுவார்த்தைகள் நாளைய தினம் சவூதி அரேபியாவில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

ரஷ்யாவும் அமெரிக்காவும் இந்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமாதான பேச்சு வார்த்தைகளில் ஐரோப்பாவிற்கு எவ்வித வகிபாகமும் கிடையாது என ரஷ்யா தெரிவித்துள்ளது.

சவூதியில் நடைபெறும் சமாதான பேச்சுவார்த்தைகளில் உக்ரைன் பங்கேற்காது என அறிவித்துள்ளது.

எனினும், தமது பங்களிப்பு இன்றி முன்னெடுக்கப்படும் எந்தவொரு சமாதான பேச்சுவார்த்தைகளும் வெற்றியளிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளது.

இதேவேளை, உக்ரைன் – ரஷ்ய விவகாரம் தொடர்பில் அவசரமாக கலந்துரையாடும் நோக்கில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் விசேட உச்சிமாநாடு ஒன்றை கூட்டியுள்ளனர்.

பிரான்ஸின் பாரிஸில் இந்த உச்சி மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022ம் ஆண்டு முதல் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் போர் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த போரில் குறைந்தபட்சம் 46000 உக்ரைன் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி வொளாடிமிர் ஸெலென்ஸ்கீ தெரிவித்துள்ளார்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.