சுவிஸ்  பாதுகாப்புத்துறையில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள்

Must Read

சுவிட்சர்லர்நது இராணுவத்திற்கும் புலனாய்வு சேவைக்கும் தலைவர்களாக இருந்த இரண்டு முக்கிய அதிகாரிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இராணுவத் தலைவர் தோமஸ் சூஸ்லி (Thomas Süssli) ஏற்கனவே தனது பதவி விலகல் கடிதத்தை அளித்துள்ளதாக Neue Zürcher Zeitung நாளிதழ் செய்தி வெளியிட்டது.

எனினும், சுவிஸ் பாதுகாப்பு அமைச்சகமும், இராணுவமும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்க மறுத்துள்ளன.

அதேபோல், சுவிஸ் புலனாய்வு சேவையின் (FIS) தலைவர் கிறிஸ்தியன் டுச்ஸே (Christian Dussey) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சுவிஸ் தேசிய ஒளிபரப்பாளர் SRF உட்பட சில ஊடகங்கள், அரசாங்கத்திற்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து இந்த இரட்டை பதவி விலகல் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.

சூஸ்லி 2020ஆம் ஆண்டு சுவிஸ் ஆயுதப் படைகளின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஆனால், அண்மையில் தேவையற்ற உபகரண கொள்முதல் திட்டங்களுக்காக இராணுவம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்தது.

டுச்ஸே 2022ஆம் ஆண்டு சுவிஸ் புலனாய்வு சேவையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

கடந்த மாதம், சுவிஸ் பாதுகாப்பு அமைச்சர் வியோலா அம்ஹெர்ட் (Viola Amherd) தனது பதவி விலகல் முடிவை அறிவித்திருந்தார். அவர் மார்ச் மாத இறுதியில் தனது பதவியிலிருந்து விலக உள்ளார்.

இந்த தொடர் ராஜினாமாக்கள் சுவிஸ் பாதுகாப்புத் துறையின் நிர்வாகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.