அர்ஜுன் மஹேந்திரனை நாடு கடத்த முடியாது – சிங்கப்பூர்

Must Read

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்படும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனை சட்ட ரீதியாக நாடு கடத்த முடியாது சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ம்திய வங்கி பிணைமுறி மோசடியினால் 2015 ஆம் ஆண்டில் ரூ.10 பில்லியன் ரூபா இழப்பு அரசுக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நல்லாட்சிக் அரசின் கீழ் நடந்த இந்த மோசடியில் தொடர்புடைய மஹேந்திரனை நாடு கடத்துமாறு சட்ட மா அதிபர் திணைக்களம் கோரியிருந்தது.

இலங்கை வம்சாவளியுடைய சிங்கப்பூர் குடிமகனாகிய மஹேந்திரன், 2015-ம் ஆண்டு மத்திய வங்கி ஆளுநராக பதவியேற்றார்.

இண்டர்போல் ஊடாக மஹேந்திரனை கைது செய்ய சர்வதேச பிடிவிராந்து உத்தரவினை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ம் திகதி மத்திய வங்கி அரசுப் பிணைகளை வெளியிட்டபோது, அதன் ஆளுநராக மஹேந்திரன் இருந்தார். Perpetual Treasuries Limited என்ற முதலீட்டு நிறுவனம், மஹேந்திரனின் மருமகன் அர்ஜுன் அலோசியஸ் (Arjun Aloysius) உடையதாகும்.

இந்த நிறுவனம் பிணை முறி மோசடியில் பெரிய பயனாளியாக இருந்தது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சட்ட நிர்வாக அதிகாரிகள், அர்ஜுன் மஹேந்திரனை நாடு கடத்துவதற்கான சட்ட வாய்ப்பு இல்லை என்று இலங்கை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

ஆனால், இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகியன பொதுநல நாடுகளாக (Commonwealth) இருப்பதால், பொதுநல நாடுகளுக்கிடையில் குற்றவாளிகளை நாடு கடத்துவதற்கான சட்ட திட்டங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.