உலகின் மிகச்சிறிய பூங்கா என கின்னஸ் சாதனை படைத்த பூங்கா

Must Read

ஜப்பானின் மத்திய பகுதியான ஷிஜுஒகா மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு மிகச்சிறிய பூங்கா, கின்னஸ் உலகச் சாதனையில் உலகின் மிகச்சிறிய பூங்கா என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.

இந்த 2.6 சதுர அடிகள் மட்டுமே கொண்ட பூங்கா, நாலு காகிதத் தாள்களின் அளவிற்கு சமமாக இருக்கிறது.

சிறியதானாலும், இது மக்களுக்கு ஓய்வு கொடுக்க ஒரு மரத்துடன் கூடிய சிறிய இருக்கை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஒரு புதருடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொலைவில் இருந்து பார்க்கும் போது, இது ஒரு பொன்சாய் மரம் போலவே தோன்றும், ஏனெனில் இது ஜப்பானின் மினியேச்சர் தோட்டக்கலை கலையை பிரதிபலிக்கிறது.

இந்த பூங்கா, ஜப்பானின் தலைநகர் டோக்யோவிற்கு தென்மேற்கில் 68 மைல் தொலைவில் உள்ள நாகைசுமி நகர மன்றத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது.

இது முதன்முதலில் 1988ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஆனால், இதற்கு முன்பு அமெரிக்காவின் ஓரிகன் மாநிலம், போர்ட்லாந்தில் உள்ள Mill Ends Park தான் உலகின் சிறிய பூங்காவாக காணப்பட்டது.

நாகைசுமியில் வசிக்கும் ஒருவர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யும்போது, Mill Ends Park பற்றிய தகவலைக் கண்டறிந்தார். இதன் பின்னர், “அதைவிட சிறிய பூங்கா உருவாக்க வேண்டும்” என்ற எண்ணம் உருவானது என நகர நிர்மாணத்துறை குழுத் தலைவர் ஷுஜி கொயாமா கின்னஸ் அமைப்பிற்கு தெரிவித்துள்ளார்.

அரசாங்க அதிகாரிகள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பரிசோதகரை கொண்டு வந்து பூங்காவை சரியாக அளந்து, கின்னஸ் உலக சாதனைச் சான்று பெற்றனர்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.