முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் தலைமறைவு

Must Read

முன்னாள் பொலிஸ் மாஅதிபர் (IGP) தேசபந்து தென்னகோன் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தேசபந்துவிற்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது.

எனினும், குற்றப் புலனாய்வு பிரிவு (CID) அவரை தேடும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், இதுவரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், , “அவர் நாட்டை விட்டு வெளியேறவில்லை. இலங்கையிலேயே இருக்கிறார் என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி சேனவிரத்ன தெரிவித்துள்ளார்.

மாத்தறை நீதிமன்றம் 2023ஆம் ஆண்டு வெலிகமவில் அமைந்துள்ள ஹோட்டலுக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக தென்னகோனை கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.

மேலும், கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு (CCD) அதிகாரிகள் ஏழுபேருக்கும் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்று (1) தென்னகோனை வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

“நீதி மன்ற உத்தரவு காரணமாக CID நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எவரும் சட்டத்திற்கு மேல் இல்லை” எனவும் பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, தெரிவித்துள்ளார்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.