உக்ரைனுக்கான அமெரிக்க இராணுவ உதவியை நிறுத்த உத்தரவு

Must Read

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், உக்கிரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் கடந்த வாரம் நடந்த கடுமையான வாதத்திற்குப் பிறகு, அமெரிக்க இராணுவ உதவிகளை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.

இந்த முடிவு, வெள்ளை மாளிகையில் நடந்த தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுடனான சந்திப்புகளின் பின்னர் எடுக்கப்பட்டது.

இது உக்ரைனின் போர் திறனை குறைக்கும் அபாயத்தை எழுப்பும் என்று அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி டிரம்ப் சமாதானத்தை முக்கியமாகக் கருதுகிறார். எங்கள் கூட்டாளிகளும் அதற்கு உறுதிப்படுத்தல் அளிக்க வேண்டும். எங்களது உதவி ஒரு தீர்விற்கு வழிவகுக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்பதால் இதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம் என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் மற்றும் கியேவ் இடையே கடந்த ஒரு வாரமாக பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், இந்த முடிவு இரு நாடுகளுக்கிடையேயான உறவில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் கருத்துக்களை ஒப்புக்கொண்டு, தவறாக உக்ரைன் இந்த போரைத் தொடங்கியது என்றும், ஜெலென்ஸ்கி சர்வாதிகாரி என்றும் குற்றம் சாட்டுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இராணுவ உதவியை நிறுத்தும் இந்த முடிவு, போர் சமநிலைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த முடிவின் காரணமாக, உக்ரைன் அடுத்த சில வாரங்கள் அல்லது கோடை தொடங்கும் வரை தன்னுடைய போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் அதன் பிறகு, அமெரிக்க ஆதரவின்மையால் அதிரடி தாக்குதல்களில் பின்னடைவை சந்திக்க நேரிடலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ATACMS போன்ற நீண்ட தூர ஏவுகணைகள், உக்ரைன் ரஷ்யாவின் ஆழமுள்ள பகுதிகளை தாக்க பயன்படுத்தப்பட்டன. ஆனால் இந்த ஆயுதங்கள் நிறுத்தப்பட்டால், உக்ரைன் தனது தாக்குதலில் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்கா உதவியை நிறுத்தினாலும், ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு தேவையான பீரங்கிகள் மற்றும் தற்காப்பு சாதனங்களை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இருப்பினும், மிக நவீனமான ஆயுதங்களை உற்பத்தி செய்யும் முக்கியமான நாடு அமெரிக்காதான் என்பதால், இது உக்ரைனுக்கு பெரிய இழப்பாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டொனால்ட் ட்ரம்பின் இந்த முடிவு உக்ரைன் போரின் எதிர்காலத்தை எப்படி மாற்றும் என்பதற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.