19.6 C
Switzerland
Monday, May 19, 2025

இங்கிலாந்துக்கு பயணம் செய்யும் சுவிஸ் பிரஜைகள் இன்று முதல் பயண அனுமதிக்கா விண்ணப்பிக்கலாம்

Must Read

இங்கிலாந்து பயணத்தை திட்டமிட்டுள்ள சுவிஸ் பிரஜைகள், புதிய பயண அனுமதி (ETA – Electronic Travel Authorisation) விண்ணப்பிக்கும் வசதி இன்று (மார்ச் 5) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் 2ம் திகதியிலிருந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரிட்டன் அல்லாத (non-UK-national) குடியுரிமையாளர்கள், இங்கிலாந்து செல்ல ETA பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், ஏற்கனவே பயணத்துக்கு தயாராக இருப்பவர்கள், இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

ETA பெறுவதற்கான கட்டணம்
• £10 (11.20 ஸ்விஸ் ஃப்ராங்க்)
• எதிர்காலத்தில், இது £16 (18.10 ஃப்ராங்க்) ஆக அதிகரிக்கலாம், ஆனால் இதற்கான சரியான திகதி அறிவிக்கப்படவில்லை.
ETA அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

யார் ETA தேவைப்படவில்லை?
• நீங்கள் விமான நிலையத்தில் மட்டும் இடைநிற்றல் (transit) செய்கிறீர்கள் என்றால், ETA தேவையில்லை.
• இங்கிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து இரண்டிற்கும் குடியுரிமை (dual citizenship) உள்ளவர்கள் பிரிட்டிஷ் கடவுச்சீட்டு மூலம் பயணம் செய்தால், ETA கட்டாயம் இல்லை.

இந்த புதிய விதிமுறைகள் எதிர்கால பயணங்களுக்கு அவசியமானவை என்பதால், பயணத்திற்கும் முன்பாக விண்ணப்பிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES