போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகின்றோம் – உக்ரைன் ஜனாதிபதி

Must Read

உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் செலென்ஸ்கி கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புடன் ஓவல் அலுவலகத்தில் சந்தித்த போது, எதிர்பார்த்தபடி நடக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த சந்திப்பு “மன வருத்தமளிக்கிறது” என்றும், உக்ரைன் போருக்கு முடிவு காண பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

அந்த சந்திப்பில், டிரம்ப்பும் துணை ஜனாதிபதி ஜேடி வான்சும் செலென்ஸ்கியை கடுமையாக விமர்சித்து, ” மூன்றாம் உலக யுத்தத்தை மூட்ட முயற்சிப்பதாக குற்றம் சாட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.

செலென்ஸ்கி, எதிர்காலத்திலான உறவுகள் கட்டுமானமானதாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

நாங்கள் முடிவற்ற போரைக் கடந்து செல்ல விரும்பவில்லை. உக்ரைன் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வர தயாராக உள்ளது  என செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் உக்ரைன் ஒரு முக்கிய கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருந்தது. ஆனால், சர்ச்சைக்குரிய சந்திப்பின் காரணமாக ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை.

போருக்கு முடிவுக்கான முதல் கட்டமாக கைதிகள் பரிமாற்றம், விமான தாக்குதல்கள் மற்றும் கடல் பகுதியில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது, பிரான்ஸ் அதிபர் எமானுவல் மாக்ரோன் முன்மொழிந்த திட்டத்துடன் ஒத்துபோகும் என்பது குறிப்பிடத்டதக்கது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.