ரஸ்யா சமாதான பேச்சுவார்த்தைக்கு தயாராகின்றது

Must Read

ரஸ்யா சமாதான பேச்சுவார்த்தைக்கு தயாராகின்றது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மீண்டும் பதவியேற்ற பிறகு காங்கிரசில் தனது முதல் உரையை நிகழ்த்தினார். இதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் பற்றி பேசியிருந்தார்.

குறிப்பாக உக்ரைன் விவகாரங்கள் தொடர்பிலும் தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலன்ஸ்கியிடம் இருந்து கிடைத்த கடிதத்தை படித்துக் கேட்ட டிரம்ப், “உக்ரைன் உடன்படிக்கைக்காக விரைவில் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது” என்று கூறினார்.

மேலும், ரஷ்யாவிலிருந்தும் “அமைதிக்கான பல்வேறு சமிக்ஞைகள்  வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

செலன்ஸ்கி, நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “டிரம்பின் வலுவான தலைமை கீழ் நாம் போரை முடிவுக்கு கொண்டு வர தயாராக உள்ளோம். நீடித்த அமைதி நிலை ஏற்படுவதற்கான பேச்சுவார்த்தையில் உடனடியாக இணைவதற்குத் தயாராக உள்ளோம்” எனக் கூறினார்.

இந்த அறிவிப்புக்கு ஒரு நாள் முன்பு, டிரம்ப், உக்ரைனுக்கான அனைத்து இராணுவ உதவிகளையும் நிறுத்தி வைத்திருந்தார்.

இது கடந்த வாரம் ஒவல் அலுவலகத்தில் நடந்த டிரம்ப்-செலன்ஸ்கி சந்திப்பின் விளைவாகவே உருவான முடிவாகக் கருதப்படுகிறது.

டிரம்ப், “ரஷ்யா தற்போது அமைதி ஒப்பந்தத்திற்குத் தயாராக இருப்பதற்கான உறுதிப்படுத்தல்களை வழங்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.

இதன் பின்னணியில், உக்ரைன்-ரஷ்யா போர் ஒரு புதிய கட்டத்திற்குள் செல்லலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

 

 

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.