விமானத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த 17 வயது சிறுவன் கைது

Must Read

அவுஸ்திரேலியாவில் விமானமொன்றில் 17 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கியும் குண்டுகளும் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மெல்போர்ன் அருகிலுள்ள அவாலான் விமான நிலையத்தில், சிட்னிக்குச் செல்லவிருந்த 160 பயணிகளுடன் கூடிய விமானம் புறப்படும் முன்பு, அந்த சிறுவனை பயணிகள் மற்றும் விமான பணியாளர்களால் பிடித்துள்ளனர்.

பாதுகாப்பு கட்டமைப்புகளை மீறி விமான நிலையத்தில் நுழைந்து, விமானத்தின் முன் கதவை நோக்கிச் சென்ற சிறுவனை அதிகாரிகள் தடுப்பதற்குள் பயணிகள் கட்டுப்படுத்தினர்.

இந்த 17 வயது சிறுவன் பெயர் வெளிப்படுத்தப்படாத நிலையில், சிறுவனுக்கு எதிராக நீதிமன்றில் ஆறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இதில் விமானத்தைக் கைப்பற்றுதல், விமானத்தின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துதல் மற்றும் குண்டு மிரட்டல் போன்ற குற்றங்கள் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.