அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பலை தயாரிக்கும் வடகொரியா

Must Read

வட கொரியா, முதல் முறையாக அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை தயாரித்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளது.

இது தென் கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமையும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அணுசக்தியில் இயக்கப்படும் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்கப்படுவதாக வடகொரிய அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

வட கொரிய தலைவர் கிம்ஜோங் உன் முக்கியமான கப்பல் கட்டும் தொழிற்சாலைகளை பார்வையிட்டதாகவும், கட்டுமான பணிகள் குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நீர்மூழ்கிக் கப்பல் 6,000-7,000 டன் அளவுடையதாகவும், 10 ஏவுகணைகளைக் கொண்டு செல்லும் திறன் உடையதாகவும் இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், “மூலோபாய ஏவுகணை” என்று குறிப்பிட்டிருப்பதால், இதில் அணு ஆயுதங்கள் தாங்கும் திறன் இருக்கலாம் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு, கிம் ஜோங் உன் அணு ஆயுதத் திட்டங்களை விரிவுபடுத்துவதாக அறிவித்திருந்தார்.

நிபுணர்கள் வட கொரியா, ரஷ்யாவிடம் இருந்து தொழில்நுட்ப உதவி பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு மாறாக வட கொரியா முன் போர் ஆயுதங்கள் மற்றும் படைகள் வழங்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.