கனடாவின் புதிய பிரதமராகும் மார்க் கார்னி

Must Read

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவி ஏற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின் லிபரல் கட்சியின் தலைவராக மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பதிலீடாக புதிய தலைவர் தேர்வு செய்யும் நடவடிக்கைகள் பல மாதங்களாக நீடித்தது.

லிபரல் கட்சி தலைமைப் பதவி தேர்தலில் கார்னி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளார்.

கனடாவில் பொதுத் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு முன்னதாக நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போதைய கருத்துக்கணிப்புகளின்படி முன்னிலையில் உள்ள கனேடாவின் கன்சர்வேட்டிவ் (Conservative) கட்சியை அவர் எதிர்கொள்ள வேண்டும்.

மார்க் கார்னி உடனடியாக லிபரல் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

 பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ விரைவில், மார்க் கார்னியிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பார் என எதிர்பர்க்கப்படுகின்றது.

மார்க் கார்னி கனடிய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.