சுவிட்சர்லாந்தை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் அமெரிக்கா

Must Read

நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை மேற்கொள்கின்ற நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்தை அமெரிக்கா சேர்த்துள்ளதாக தெரிவிக்க்பபடுகின்றது.

இந்த தகவலை சுவிட்சர்லாந்தின் பொருளாதார விவகார செயலகத்தின் பணிப்பாளர் ஹெலினே புட்லிகர் ஆர்டியேடா உறுதிப்படுத்தினார்.

வர்த்தக ரீதியான பங்கு நாடுகளின் நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாடுகள் குறித்து முறைப்பாடு செய்யுமாறு அமெரிக்க நிறுவனங்களிடம் கோரப்பட்டிருந்தது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பால் நியமிக்கப்பட்ட வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் க்ரியர் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

அமெரிக்காவுடனான வர்த்தக நடவடிக்கைகளில் சுவிட்சர்லாந்திற்கு சாதக நிலைமை காணப்படுவதனால் இவ்வாறு கறுப்பு பட்டியலிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் சுவிட்சர்லாந்து நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்  நாடாக இருக்க முடியாது என ஜேமிசன் க்ரியர் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து பல்வேறு வரிச் சலுகைகயை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை வரிவிலக்கு அடிப்படையில் சுவிட்சர்லாந்துக்கு ஏற்றுமதி செய்யலாம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் வெளிநாட்டு முதலீட்டில் சுவிட்சர்லாந்து ஆறாவது இடத்தில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், ஸ்விஸ் நிறுவனங்கள் அமெரிக்காவில் சுமார் 5,00,000 பணியிடங்களை உருவாக்கியுள்ளன, இதில் ஒவ்வொரு வேலைக்கும் சராசரியாக 131,000 அமெரிக்க டாலர் வருமானமாகும்.

எனினும் சுவிட்சர்லாந்து , அமெரிக்காவுடன் வர்த்தக போரில் ஈடுபடாது தெரிவித்துள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.