சுவிட்சர்லாந்தின் ஆயுத ஏற்றுமதியில் வீழ்ச்சி

Must Read

2024ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்து அதற்கு முன்னைய ஆண்டைவிட குறைவான போர் உபகரணங்களை ஏற்றுமதி செய்துள்ளது.

கடந்த ஆண்டில் சுமார்  664.7 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் (சுமார் 757 மில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்புள்ள இராணுவ உபகரணங்கள் 60 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக சுவிஸ் பொருளாதார விவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டை விட 2024ஆம் ஆண்டில் ஆயுத ஏற்றுமதி 5% குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாறாக, மொத்த பொருட்கள் ஏற்றுமதி கடந்த ஆண்டு 4% உயர்ந்துள்ளது.

2024ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் முக்கிய ஆயுத கொள்வனவு நாடுகளாக கீழ்க்கண்டவாறு பட்டியலிடப்பட்டுள்ளது:

ஜெர்மனி – CHF 203.8 மில்லியன்
அமெரிக்கா – CHF 76.1 மில்லியன்
இத்தாலி – CHF 50.6 மில்லியன்
ஸ்வீடன் – CHF 42.0 மில்லியன்
ரோமேனியா – CHF 38.5 மில்லியன்

ஜெர்மனிக்கு பல்வேறு வகையான குண்டு, வெடிகுண்டு மற்றும் அதன் கூறுகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

ஜெர்மனி மற்றும் ரோமேனியாவுக்கு கவச வாகனங்கள் மற்றும் அவற்றின் பகுதிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.