கழிவறைகள் முடங்கியதால் பயணத்தை தொடர முடியாது விமான நிலையம் திரும்பிய இந்திய விமானம்

Must Read

நடு வானில் பறந்து கொண்டிருந்த விமானமொன்றில் கழிவறைகள் பயன்படுத்த முடியாத காரணத்தினால் சிக்காககோ விமான நிலையத்திற்கு திரும்பியுள்ளது.

ஏர் இந்தியா விமானமொன்றில் (AI126) இவ்வாறு வழிவறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டதாகவும், சிகாகோவிலிருந்து புது தில்லிக்கு பயணம் செய்த விமானமே இவ்வாறு பயணத்தை இடைநிறுத்தி புறப்பட்ட விமான நிலையத்திற்கே திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பயணத்தின் ஐந்து மணிநேரத்திற்குப் பிறகு பயணத்தை தொடர்வதில்லை என விமானிகள் தீர்மானித்துள்ளனர்.

விமானப் பணியாளர்கள் முதலில் ஒரு மணி 45 நிமிடத்திற்குள் சில கழிவறைகள் செயலிழந்ததைக் கண்டுபிடித்தனர் என ஏர் இந்தியாவின் தகவல் வெளியிட்டுள்ளது.

பின்னர், 12 கழிவறைகளில் 8 பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனதாக பணியாளர்கள் உறுதிப்படுத்தினர்.

இதனால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கழிவறைகளில் பாலித்தீன் பைகள், துணிகள், மற்றும் வேறு பொருட்கள் கழிவுநீர் குழாய்களில் சிக்கியிருந்ததாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

அத்துடன், இரவு நேரத்தில் ஐரோப்பிய விமான நிலையங்களில் அமுலில் உள்ளசெயல்பாட்டு கட்டுப்பாடுகள் காரணமாக விமானத்தை மீண்டும் சிகாகோவிற்குத் திருப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தால், விமானம் மொத்தம் 10 மணி நேரம் பயணித்ததாகவும், விமானம் கிரீன்லாந்தின் மேல் பறந்த போது மீண்டும் சிக்காகோ திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிகாகோவிற்கு திரும்பிய பயணிகளுக்கு ஹோட்டல் வசதி மற்றும் மாற்று விமான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதற்கு முன்னரும் விமான கழிவறைகளில் போர்வைகள், உள்ளாடைகள், மற்றும் குழந்தைகளின் டைப்பர்கள் போன்ற பொருட்கள் காணப்பட்டதாகவும் விமான சேவை நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

 

 

 

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.