சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் புதிய அமைச்சராக மத்திய கட்சியின் மார்டின் ப்பிஸ்டர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் நடந்த இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில் 134 வாக்குகளுடன் வெற்றி பெற்ற அவர், வியோலா அம்ஹெர்டுக்கு பதிலாக பதவி வகிக்க உள்ளார்.
சுவிட்சர்லாந்து அமைச்சரயைில் 4 ஜெர்மன் பேசும் உறுப்பினர்கள், 2 பிரஞ்சு பேசும் உறுப்பினர்கள், 1 இத்தாலிய மொழிப் பேசும் உறுப்பினர் என பதவி வகிக்கின்றனர்.
எனினும், பாலின சமநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது – இனி இரண்டே பெண்கள் மட்டுமே அமைச்சரவையில் அங்கம் வகிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய அமைச்சரவையில் கரின் கெல்லர்-சுட்டர் மற்றும் எலிசபெத் போம்-ஷ்னைடர் ஆகியோர் பெண் அமைச்சர்களாக கடமையாற்றுகின்றனர்.
மத்திய கட்சி தனது உத்தியோகப்பூர்வ பட்டியலில் எந்த ஒரு பெண்களையும் சேர்க்கவில்லை என கட்சி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சோஷலிஸ்ட் மற்றும் பசுமை கட்சிகள் அமைச்சரவையில் பெண்கள் குறைவாக இருப்பதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.