சீனா ஹோட்டலில் சூப் பாத்திரத்தில் சிறுநீர் கழித்த நபர்கள்…

Must Read

சீனாவின் முன்னணி ஹோட்டல்களில் ஒன்றான ஹய்டிலாவோவில் சூப்பில் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்காக குறித்த ஹோட்டல் நிர்வாகம் வாடிக்கையாளர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் என ஹோட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது,

சீனாவின் பிரபலமான ஹாட்பாட் உணவகம் Haidilao, அதன் ஷாங்காய் கிளையில் இருவர் சூப்பில் சிறுநீர் கழிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

கடந்த மாதத்தின் இறுதியில், Haidilao உணவகத்தின் தனியார் அறையில் இருவர் ஹாட்பாட் சூப்பில் சிறுநீர் கழிக்கும் காணொளி இணையத்தில் பரவியது.

இந்த சம்பவம் பெப்ரவரி 24ஆம் திகதி நடந்ததாக Haidilao தெரிவித்துள்ளது.
ஆனால், மார்ச் 6ஆம் திகதி மட்டுமே உணவகத்தின் சரியான இருப்பிடத்தை உறுதிப்படுத்த முடிந்ததாகவும், இது பணியாளர்களின் குறைந்த பயிற்சியால் நேர்ந்ததாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது.

“இந்தச் சம்பவத்தால் எங்கள் வாடிக்கையாளர்கள் பெரும் மன அழுத்தத்துக்குள்ளாகியிருப்பதை நாங்கள் நன்றாக புரிந்துக்கொள்கிறோம்.

எவ்வாறெனினும் அதை முற்றிலும் ஈடு செய்ய முடியாது. இருப்பினும், முழுமையான பொறுப்பை எடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்” என Haidilao தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 17 வயதான இளைஞர்கள் இருவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.