அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாகத்துடன் பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமையை (Birthright Citizenship) முடிவுக்கு கொண்டு வர உச்ச நீதிமன்றத்திடம் அவசர மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கீழ்நிலை நீதிமன்றங்கள் தடையை விதித்த நிலையில், டிரம்ப் நிர்வாகம் அந்த உத்தரவுகளை செயல்படுத்த தடையில்லா அனுமதி வழங்குமாறு கோரியுள்ளது.
ஜனவரியில், ஒரு மத்திய நீதிபதி டிரம்பின் கட்டளை தெளிவாக அரசியலமைப்புக்கு முரண்பட்டது என்று கூறினார்.
மேலும், மேரிலாண்ட் நீதிபதி இது அமெரிக்காவின் 250 வருட குடியுரிமை சரித்திரத்துக்கு எதிராக உள்ளது என்று அறிவித்தார்.
மேரிலாண்ட், மாசச்சூசெட்ஸ், வாஷிங்டன் உள்ளிட்ட பல மாநில நீதிமன்றங்கள் டிரம்பின் நிர்வாகத்துக்கு எதிராக தடை உத்தரவு வழங்கின.
1868ல் அமெரிக்க அரசியலமைப்பில் சேர்க்கப்பட்ட 14வது திருத்தச் சட்டமே இந்த பிறப்புரிமை சட்டமாகும்.
20க்கும் மேற்பட்ட மாநிலங்கள், குடியேறிகள் உரிமைகள் குழுக்கள், ஏழு தனிநபர்கள் உள்ளிட்ட பலர் டிரம்பின் ஆணைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

