மேலும் சில நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் இலங்கை

Must Read

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு அழைத்து வரும் நோக்கில் இலவச விசா வசதி இன்னும் சில நாடுகளுக்கு வழங்கப்படவுள்ளதாக வெளிவுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 39 நாடுகளுக்கு இந்த வசதி வழங்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் மேலும் சில நாடுகள் இதில் சேர்க்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் இலவச விசா வழங்கப்படும் நாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்ட போது, அவர் இதை தெரிவித்துள்ளார்.

தற்போது நாங்கள் 39 நாடுகளுக்கு விசா கட்டணம் இல்லாமல் இலவசமாக வழங்குகிறோம். இதை மேலும் சில நாடுகளுக்கு வழங்கும் முன்மொழிவை அமைச்சரவை ஏற்கனவே அங்கீகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

விசேட வர்த்தமானி  அறிவிப்பு (Gazette) தயாரானதும், இந்த வரவு செலவுத் திட்ட விவாதம் முடியும் முன், அதைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்போம். இதன்மூலம் கூடுதல் நாடுகளிலிருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வாய்ப்பு உருவாகும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.