விமானத்தின் கழிப்பறை குழாய் அடைப்பு காரணமாக சுவிஸ் விமானம் (Swiss Air) அமெரிக்கா பயணத்தை இடைநிறுத்த நேரிட்டுள்ளது.
குறித்த விமானம் அமெரிக்கா செல்லும் பாதையில் இருந்து திரும்பிய சம்பவம் விமான பயணிகளுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிறு இரவு சூரிசிலிருந்து வாட்சிங்டன் டிசிக்கு புறப்பட்ட SWISS விமானம், ஆட்லாண்டிக் கடலில் சென்றபோது விமானத்தின் இடது புற கழிவறைகள் அனைத்தும் செயலிழந்தன.
இதனால், விமானம் திருப்பவதற்கு தீர்மானிக்கப்பட்டது என சுவிஸ் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலைமை காரணமாக, விமானம் சூரிச் விமான நிலையத்திற்குத் திரும்ப, அங்கு இருந்த 220 பயணிகளும் மற்றொரு Airbus A-330 விமானத்திற்கு மாற்றப்பட்டனர்.
இதனால், அவர்கள் ஐந்து மணி நேரம் தாமதமாக அமெரிக்கா பயணம் செய்தனர்.
சுவிஸ் ஏர்லைன்ஸ் தரப்பில், “இது பயணிகளுக்கு ஏற்படுத்திய சிரமத்திற்கு வருந்துகிறோம். விமானம் தற்போது பழுது பார்த்து, மீண்டும் சேவைக்கு தயாராக உள்ளது” என்று தெரிவித்தனர்.
இச்சம்பவம், விமானப் பயணங்களில் அடிக்கடி எதிர்பார்க்க முடியாத சூழ்நிலைகள் ஏற்படலாம் என்பதற்கான மற்றொரு உதாரணமாகும்.
அண்மையில் எயார் இந்திய விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று விமானத்தின் கழிப்பறைகளில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக பயணத்தை ரத்து செய்ய நேரிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.