வெலிகம ஹோட்டல் துப்பாக்கிச்சூடு தொடர்பாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் வழங்கிய கைது உத்தரவை நிறைவேற்ற போலீசாருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் போலீஸ் மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனை கைது செய்வதை தடுக்கும் இடைக்கால உத்தரவை வழங்க மறுத்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, நீதிபதி (நிர்வாகத் தலைவர்) முகமது லஃபார் தலைமையில் இந்த உத்தரவை பிறப்பித்தது.
தனது கைது உத்தரவை இடைநிறுத்தக் கோரிய ரிட் மனு ஒன்றை தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்திருந்தார். ஆனால், நீதிமன்றம் இந்த மனுவை செலவுகளுடன் தள்ளுபடி செய்தது.
இதன் மூலம், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கைது உத்தரவை சட்டத்திற்கமைவாக அமுல்படுத்த வேண்டும் என காவல்துறைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, தேசபந்து தென்னக்கோனை கைது செய்ய ஆறு விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்த்பபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.