நேட்டோ மீது போர் தொடுக்க நேரிடும் என ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி திமிட்ரி மெட்வேடெவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யுக்ரைனுக்கு அமைதி காக்கும் படையினரை (peacekeepers) அனுப்புவதற்கான பிரித்தானியா மற்றும் பிரான்சின் திட்டங்களை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த முயற்சியானது நேட்டோ கூட்டுப்படையுடனான (NATO) யுத்தத்தை தூண்டக்கூடியதாக இருக்கும் என எச்சரித்துள்ளார்.
பிரஞ்சு ஜனாதிபதி எமானுவல் மேக்ரோன் மற்றும் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் “முட்டாள்தனமாக நடந்து கொள்வதாக மெட்வேடெவ் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், அமைதி காக்கும் படையினர் நோட்டோவில் அங்கம் வகிக்காத நாடுகளிலிருந்து வர வேண்டும் என்பது பல தடவைகள் வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் அமைதி காக்கும் படையினரை யுக்ரைனுக்கு அனுப்பி வைக்கும் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்தால் அது நேட்டோவுடனான போரை நேரடியாக தூண்டக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேக்ரோன் மற்றும் ஸ்டார்மர் ஆகிய இருவரையும் மெட்வேடெவ், “குப்பைகளாக” அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உடன் மேலதிக ஒத்துழைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.
மெட்வேடெவ், தனது 2008-2012 காலகட்டத்தில் ஒரு லிபரல் அரசியலாளராக கருதப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மெட்வேடெவ், மேற்கு நாடுகள் மீது அணுவாயுத போர் நடத்துவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கீர் ஸ்டார்மர், தனது “தன்னார்வ கூட்டமைப்பு” (coalition of the willing) வழியாக, ஒப்பந்தம் ஏற்படும் பட்சத்தில், தங்கள் சொந்த படைகள் மூலம் யுக்ரைனில் அமைதியை நிலைநாட்ட முயற்சிக்கின்றார் என குறிப்பிடப்படுகிறது.
இந்த உற்சாகம் மற்றும் கடுமையான முந்தைய எச்சரிக்கைகள், சர்வதேச அரசியல் சூழ்நிலையின் சிக்கல்களை மேலும் தீவிரப்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.