காசா யுத்தம் மீண்டும் ஆரம்பம்; ஓரே நாளில் 400 பேர் பலி

Must Read

காசாவில் மீண்டும் தாக்குதல்கள் தொடங்கியதற்கு ஹமாஸ் இயக்கம் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என ஐக்கிய நாடுகளிலுள்ள அமெரிக்கத் தூதர் டொரோத்தி ஷீயா (Dorothy Shea) தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதல்களில் 400க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த நிலையில், யுத்தம் மீண்டும் தொடங்குவதற்கான முழுப் பொறுப்பும் ஹமாஸிற்கே உரியது” என அவர் தெரிவித்தார்.

ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் உரையாற்றிய டொரோத்தி ஷீயா, இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ராமழான் மற்றும் பாஸ்கா பண்டிகைகளை தாண்டி நிலையான போர் நிறுத்த உடன்படிக்கை குறித்து பேச கால அவகாசம் தரும் ‘பிரிட்ஜ்’ திட்டத்தையும் ஹமாஸ் நிராகரித்தது” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

மக்கள் இடையே மறைந்து அவர்கள் வாழ்க்கையை ஆபத்தில் இட்டுள்ளது ஹமாஸ்” என்றும், “இதன் காரணமாக காசாவின் பொதுமக்களே அதிகமாக பாதிக்கப்படுவார்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஹமாஸ் தனது கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும், இல்லையெனில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், எச்சரித்துள்ளதாகவும் டொரோத்தி ஷீயா தெரிவித்துள்ளார்.

“இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, எப்போதும் அமைதியை ஆதரிப்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு” என்று வெளியுறவுத்துறை பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.