9 C
Switzerland
Wednesday, May 21, 2025

கிரெவ்-9 (Crew-9) விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினர்

Must Read

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASAவின் புட்ச் வில்லிமோர் Butch Wilmore, சுனிதா வில்லியம்ஸ் Suni Williams, நிக் ஹேக் Nick Hague மற்றும் ரஷியாவின் விண்வெளி வீரர் அலெக்சான்டர் கொர்புனோவ் Aleksandr Gorbunov ஆகியோர் அடங்கிய Crew-9 குழு, பாதுகாப்பாக புளோரிடா கடற்கரைக்கு அருகே கடலில் தரையிறங்கினர்.

இலங்கை நேரப்படி இரவு 5:57 மணிக்கு (ET) அவர்கள் Capsule வெற்றிகரமாக கடலில் இறங்கியது.

விண்வெளி வீரர்களின் உடல் மீண்டும் பூமியின் ஈர்ப்புக்கேற்ப பழகுவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விண்வெளி வீரர்கள் மீட்புக் குழு கப்பலில் இருந்தபோதே அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

எந்தவொரு உடல்நல பிரச்சினையும் இல்லையென உறுதிப்படுத்திய பின்பே அவர்கள் அடுத்த பயணத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்.

கடந்த Crew-8 பயணத்தில், மருத்துவ அவசர நிலை காரணமாக, நான்கு வீரர்களும் உடனடியாக ஹூஸ்டனுக்கு செல்ல முடியாமல், புளோரிடாவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதைக் குறிப்பிடலாம்.

மருத்துவ பரிசோதனைகள் முடிந்த பிறகு, Crew-9 குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் புளோரிடா விமான நிலையத்திற்குச் செல்லவுள்ளனர்.

அங்கிருந்து ஹூஸ்டன் நகரில் உள்ள NASA-வின் Johnson Space Center-க்கு புறப்படுவார்கள். அவர்கள் மீண்டும் பூமிக்கு திரும்பிய சில நாட்களுக்கு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES