சுவிஸ் அமைச்சர்கள் அரசு விமானங்களை அதிகம் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு

Must Read

சுவிட்சர்லாந்து அரசு அமைச்சர்கள் அரசு ஜெட்டையும் ஹெலிகாப்டர்களையும் பயணங்களுக்காக அதிகமாக பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது சர்வதேச பயணங்களுக்கு மட்டுமல்ல, நாட்டின் குறுகிய தூர பயணங்களுக்கும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது என அண்மையில் வெளியான தரவுகள் காட்டுகின்றன.

தற்போதைய ஆய்வின்படி, பாதுகாப்பு அமைச்சர் வியோலா அம்ஹேர்ட் (Viola Amherd) மற்றும் வெளிநாட்டு விவகார அமைச்சர் இக்னாசியோ காசிஸ் (Ignazio Cassis) ஆகியோர் அரசு ஜெட்டைப் பயணிக்க அதிகமாக பயன்படுத்தியவர்கள்.

அம்ஹேர்ட் கடந்த ஆண்டு 14 முறை சியான் (Sion) – பெல்ப் (Belp) இடையே விமானம் பயணித்துள்ளார்.

காசிஸ் 13 முறை பெர்ன் – லுகானோ (Lugano) இடையே பயணித்துள்ளார், இதனால் அரசு ஜெட்டுக்கு “Taxi Ticino” என்ற பெயர் கிடைத்துள்ளது.

காசிஸ், பெரும்பாலான பயணங்களை உள்நாட்டு பயணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஒரு ஹாக்கி போட்டியை முடித்தவுடன் விரைவாக வீட்டிற்கு செல்லவும் இந்த விமானங்களை பயன்படுத்தியுள்ளார்.

நீதியமைச்சர் பீட் யான்ஸ் (Beat Jans) மொத்தம் 33 முறை விமானத்தில் பயணித்துள்ளார், இதில் மூன்றில் ஒரு பகுதி உள்ளூர் பயணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார அமைச்சர் காய் பார்மெலின் (Guy Parmelin) மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஆல்பர்ட் ரோஸ்டி (Albert Rösti) மிகக் குறைவாக, முறையே 12 மற்றும் 13 முறை பயணித்துள்ளனர்.

உள்துறை அமைச்சர் எலிசபெத் போம்-ஷ்னைடர் (Elisabeth Baume-Schneider) ஒரு முறை மட்டுமே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தியுள்ளார்.

சிறிய தூர பயணங்களுக்கு அரசு ஜெட்டைப் பயன்படுத்துவது வளங்களை வீணடிக்கிறதா? அல்லது அரசு பணிகளை விரைவாக முடிக்க உதவுகிறதா? என்ற கேள்வி தற்போது விவாதத்திற்குரியதாக உள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.