இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே நவம்பர் மாதம் ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பிறகு, மிக மோசமான மோதல் நேற்று முன்தினம் பதிவாகியது.
லெபனானில் இருந்து பல ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதை தொடர்ந்து, இஸ்ரேல் பல விமான தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஈரானின் ஆதரவுடன் செயல்படும் ஹெஸ்பொல்லா இயக்கத்தின் தெற்கு லெபனானில் உள்ள ஏவுகணை அமைப்புகள் மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது.
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியவர்களின் அடையாளம் தெளிவாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தாக்குதல்களில் ஏழு பேர், உட்பட ஒரு குழந்தை உயிரிழந்துள்ளதாகவும், 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
முதலாவது தாக்குதலுக்கு பிறகு, இரவு நேரத்திலும் இஸ்ரேல் இரண்டாவது கட்ட விமான தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஆயுத களஞ்சியம், கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் உள்கட்டமைப்பு அமைப்புகள் இலக்காக கொள்ளப்பட்டன.
இஸ்ரேலின் வடக்கு நகரமான மெட்டுலாவில் மூன்று ராக்கெட்டுகள் தடுத்து நிறுத்தப்பட்டன, உயிரிழப்புகள் ஏற்படவில்லை.