அமெரிக்காவின் Neuralink நிறுவனம் உருவாக்கிய மூளைக்குள் பொருத்தக்கூடிய சிறிய சிப் மூலம் நோலண்ட் ஆர்பாக் என்ற இளைஞர் தனது மனதில் நினைப்பதை கணினி கட்டளையாக மாற்றக் கூடிய ஆற்றலைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
2016-ல் நீச்சல் விபத்தில் நொடி நேரத்தில் முழுமையாக பாதிக்கப்பட்ட நோலண்ட் (30 வயது) 2024 ஜனவரியில் Neuralink நிறுவனத்தின் முதல் சிப் பயனர் ஆனார்.
மூளையில் ஏற்படும் மின்னழுத்த இயக்கங்களை கணிக்க இந்த சிப் உதவுகிறது. மூளை செயல்பாடுகளை கணினிக்கு தகவலாக மாற்றும் இந்த தொழில்நுட்பத்தை Brain-Computer Interface (BCI) என்று அழைக்கப்படுகிறது.
Neuralink நிறுவனத்துக்கு எலோன் மஸ்க் முதலீடு செய்ததால் உலகளவில் பெரும் கவனம் பெற்றுள்ளது.
மஸ்க் இதை பெரிய விஞ்ஞான சாதனையாக விளம்பரப்படுத்தியாலும், சில விஞ்ஞானிகள் இதன் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுப்பியுள்ளனர்.
மூளை மீது நேரடி பரிசோதனை செய்யும் திறனுள்ள இந்தக் கருவி, நெருக்கடி தரும் தகவல் கண்காணிப்புக்கு வழிவகுக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
அறுவை சிகிச்சைக்கு பின், முதலில் தனது விரல்களை நகர்த்த நினைத்தபோது, கணினியில் கெர்சர் நகர்ந்ததை பார்த்து ஆச்சர்யமாக இருந்தது.
இப்போது, அவர் இந்த சாதனத்துடன் வீடியோ கேம்கள் மற்றும் சதுரங்கம் விளையாட முடிகிறது.
நண்பர்களை வீடியோ கேம்களில் வெல்வது – இது முடியாத விஷயம், ஆனால் இன்று முடிகிறது!”
முற்றிலும் முடக்கநிலையிலிருக்கும் நோயாளிகளுக்கு சுயமாக இயங்கவதற்கு இந்த தொழில்நுட்பம் வாய்ப்ப அளிக்கின்றது.
இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் செயற்கை கை, கார், கம்ப்யூட்டர் மற்றும் ரோபோட்டுகளை இயக்கும் நிலைக்கு செல்லலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், இந்த தொழில்நுட்பம் மனித மூளையுடன் நேரடி தொடர்பு கொண்டது என்பதனால் பல்வேறு ஆபத்துக்களும் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.