கிரீன்லாந்தில் அமெரிக்க அதிகாரிகள் விஜயம் – பிரதமர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்

Must Read

அமெரிக்காவின் இரண்டாம் பெண்மணியாக உள்ள உஷா வான்ஸ் தலைமையிலான அதிகாரிகள் குழு கிரீன்லாந்துக்கு விஜயம் செய்யும் திட்டம், “மிகவும் ஆக்கிரமிப்பு தன்மையுடையது” என அந்நாட்டு பிரதமர் மியூட் பி. எகெடே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை இணைக்க விரும்புவதாக தெரிவித்த பின்னர், இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை மேலும் மோசமாக்கியுள்ளது.

வெள்ளை மாளிகையின் தகவலின்படி, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் மனைவி உஷா வான்ஸ், இந்த வாரம் கிரீன்லாந்தில் நடைபெறும் தேசிய நாய் சவாரி போட்டியை பார்வையிட்டு, “கிரீன்லாந்து கலாச்சாரம் மற்றும் ஒற்றுமையை கொண்டாட” உள்ளார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸும் இந்த பயணத்தில் கலந்து கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், “இந்த பயணம் மிகுந்த ஆக்கிரமிப்பு செயல்” என பிரதமர் எகெடே, Sermitsiaq பத்திரிகையில் கூறியுள்ளார்.

“தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கிரீன்லாந்தில் என்ன செய்யப் போகிறார்? இதன் ஒரே நோக்கம் நம்மீது அதிகாரம் செலுத்துவதை நிரூபிப்பதே. அவரது தரிசனம் கிரீன்லாந்து மீது அமெரிக்காவின் கட்டுப்பாடு அதிகரிக்க வேண்டும் என ட்ரம்ப் நினைக்கும் எண்ணத்தை மேலும் வலுப்படுத்தும்,” என எகெடே எச்சரித்தார்.

ட்ரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவில் இணைக்க வேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். “நாம் இதைப் பெற்றே தீருவோம், எப்படியோ அதை செய்யப் போகிறோம்,” என அவர் சமீபத்தில் காங்கிரஸ் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

கிரீன்லாந்து, தனியார் தொழில்துறைக்கும் இராணுவத்துறைக்கும் அத்தியாவசியமான அரிதான கனிம வளங்களை கொண்டுள்ளது. இதனால், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஆர்க்டிக் பகுதியில் செல்வாக்கை வளர்த்துக்கொள்ள போராடி வருகின்றன.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.