கடவுச்சீட்டை மறந்த விமானியால் ஏற்பட்ட பரபரப்பு

Must Read

லாஸ் ஏஞ்சலஸிலிருந்து (LAX) ஷாங்காய் (Shanghai) செல்லும் யுனைடெட் ஏர்லைன்ஸ் (United Airlines) விமானம், ஒரு விமானி கடவுச்சீட்டை எடுக்க மறந்ததால் பாதியில் திரும்பிய அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மார்ச் 22 பிற்பகல் 2 மணியளவில் UA 198 எனும் யுனைடெட் ஏர்லைன்ஸ் Boeing 787 விமானம் 257 பயணிகள் மற்றும் 13 பணியாளர்களுடன் புறப்பட்டது.

இரண்டு மணி நேரம் பறந்த பின்னர், விமானம் திரும்பி சான் பிரான்சிஸ்கோவுக்கு (San Francisco) திசை திருப்பப்பட்டது. மாலை 5 மணியளவில் விமானம் அங்கு தரையிறங்கியது.

“பைலட் தனது பாஸ்போர்ட்டை கொண்டு வர மறந்துவிட்டார்,” என யுனைடெட் ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

அதனால், பயணிகளை அன்றிரவே புதிய குழுவினருடன் ஷாங்காய் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. பயணிகளுக்கு உணவு வவுச்சர்கள் மற்றும் நஷ்டஈடு வழங்கப்பட்டது.

“பைலட்டின் குரலில் மிகவும் விரக்தி அடைந்த தொனியில் ‘நான் என் கடவுச்சீட்டை மறந்துவிட்டேன்’ என்று கூறினார்,” என்று சீனப் பயணியான யாங் ஷுகான் (Yang Shuhan) தெரிவித்தார்.

சான் பிரான்சிஸ்கோவில் தரையிறங்கியதும், பயணிகளுக்கு 30 டொலர்கள் மதிப்புள்ள உணவு வவுச்சர்கள் வழங்கப்பட்டன. யாங் ஷுகான் இந்த தொகையை விமான நிலையத்தில் உள்ள ஒரு ஜப்பானிய உணவகத்தில் பயன்படுத்தினார்.

“என் பயண திட்டங்கள் முற்றிலும் குழப்பமடைந்தன. ஆனால் பைலட் தனது தவறை நேர்மையாக ஒப்புக்கொண்டது எனக்கு தோன்றியது,” என அவர் கூறினார்.

UA 198 திரும்பியதால், ஷாங்காயிலிருந்து LA செல்லவிருந்த UA 199 விமானமும் 6 மணி நேரம் தாமதமானது. இதனால், சில பயணிகள் தங்கள் இணைப்பு (connecting) விமானங்களை மாற்ற வேண்டிய சூழ்நிலையைக் சந்தித்தனர்.

“மிகவும் கவலைக்கிடமான நிலை. தாமதம் காரணமாக, திங்கள் அன்று என்னுடைய அனைத்து வேலைத் திட்டங்களையும் மாற்ற வேண்டியுள்ளது,” என்று LA-க்குச் சென்ற ஒரு வணிக பயணி தெரிவித்தார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த Endau Analytics நிறுவனத்தின் விமான விஷய ஆலோசகர் ஷுகோர் யூசுப் (Shukor Yusof),

“இந்த மாதிரியான பிழை உலகளாவிய விமான நிறுவனமாகிய யுனைடெட் ஏர்லைன்ஸுக்கு மிகப் பெரிய அவமானம். இது பயணிகளுக்குத் தன்னம்பிக்கையை இழக்கச் செய்யும்,” எனக் கூறினார்.

இந்தச் சம்பவம் யுனைடெட் ஏர்லைன்ஸின் முறையீட்டுப் பிழையை (Protocol Failure) வெளிப்படுத்தியுள்ளது. பெரும் விமான நிறுவனமான யுனைடெட், தங்களது பைலட் மற்றும் குழுவினரின் ஒழுக்கத்தை (Discipline) மீட்டமைக்க வேண்டிய நேரம் இது என விமானத் தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.