ஜெனீவாவிலிருந்து ஷாங்காய்க்கு நேரடி விமான சேவை

Must Read

ஜெனீவா விமான நிலையம் ஜூன் 16, 2025 முதல் சீனாவின் ஷாங்காய் நகருக்கு நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த புதிய சேவை வாரத்திற்கு நான்கு முறை – திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை – இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணங்களை China Eastern Airlines இயக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜெனீவா விமான நிலையம், இந்த புதிய நேரடி (direct) சர்வதேச விமான சேவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

சீனாவுக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையேயான பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் எனவும்,  சுற்றுலா வளர்ச்சிக்கு உதவக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவிலிருந்து சுவிட்சர்லாந்து மற்றும் அதனை அண்டியுள்ள பிரான்ஸ் பகுதிக்கு அதிகளவில் பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்த புதிய விமான சேவை, எதிர்காலத்தில் மேலும் அதிகமான சீன சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

ஜெனீவா ஏற்கனவே பீஜிங்குடன் நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது. இப்போது ஷாங்காய் சேவை கூடுதலாக தொடங்குவதால், சீனாவின் முக்கிய இரண்டு நகரங்களுக்கும் நேரடி இணைப்பு வழங்கும் ஒரே சுவிஸ் விமான நிலையமாக ஜெனீவா மாறும் என தெரிவிக்கப்படுகின்றது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.